விஷ்ணுவுக்கு குப்பைத்தொட்டியை தூக்கி காட்டிய அர்ச்சனா.. ஏளனமாக பார்த்து ரசிக்கும் மாயா..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

விஷ்ணு மற்றும் அர்ச்சனா இன்று காலை முதல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் குப்பைத்தொட்டியை எடுத்து விஷ்ணுவின் முகத்தில் அர்ச்சனா காட்டிய போது, மாயா இன்னொரு பக்கம் ஏளனமாக இருவரது சண்டையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 60 நாளை நெருங்கிவிட்ட நிலையில் ஆரம்ப முதலே சண்டை சச்சரவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா இருவருக்கும் இடையே ஆவேசமாக சண்டை நடந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன் விஷ்ணு மற்றும் அர்ச்சனா ஆவேசமாக சண்டை போட்ட புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனாவை பார்த்து ’தண்டம்’ என்று விஷ்ணு சொல்ல அதற்கு அர்ச்சனாவும் பதிலடி கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அர்ச்சனா ’போயா’ என்று கூறியதோடு குப்பைத்தொட்டியை எடுத்து அவருடைய முகத்திற்கு நேராக வைக்கிறார்.

இதை பார்த்து சக போட்டியாளர்கள் அதிருப்தி அடையும் நிலையில் விஜய் மட்டுமே இருவரையும் விலக்கி வைக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் விஷ்ணு ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மாயா அமைதியாக உட்கார்ந்து இருவரையும் ஏளனமாக சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளும் உள்ளன.

மொத்தத்தில் விஷ்ணு மற்றும் அர்ச்சனா சண்டை எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.