விஷ்ணு பட உரிமையை கைப்பற்றிய சூப்பர் குட் பிலிம்ஸ்
- IndiaGlitz, [Wednesday,October 12 2016]
நடிகர் விஷ்ணு முதன்முதலில் தயாரித்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' தமிழகத்தில் நூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த படத்தால் அவருடைய மார்க்கெட் உயர்ந்ததை அடுத்து தற்போது இந்த படம் தெலுங்கில் டப் ஆகி வருகிறது.
இந்த படத்தின் தெலுங்கு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி பெற்றுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வெளீயாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் விஷ்ணு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.