விஷாலின் 'இரும்புத்திரை' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேஜர் கதிரவன் கேரக்டரில் விஷாலும் சைக்காலஜி டாக்டர் ரதிதேவி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ள இந்த படத்தில் ஆக்சன்கிங் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் கண்ணடிக்கும் ப்ரியாவாரியர்

'ஒரு ஆடார் லவ்' படத்தின் நாயகி ப்ரியாவாரியர் அந்த படத்தின் டீசரில் ஒரு காட்சியில் ஆடிய புருவ நடனமும், கண்ணசைவும் இந்திய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.

வழுக்கைத்தலை மாப்பிள்ளையா? மணமேடையை விட்டு திடீரென எழுந்து ஓடிய மணமகள்

இளைஞர்களுக்கு தற்போது வழுக்கைத்தலை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இளைஞர்களின் இந்த பலவீனத்தை பலமாக பயன்படுத்தி பலர் வழுக்கைத்தலையில் முடிநடும் நிலையங்களை தொடங்கி

ஜோதிகாவின் ரீமேக் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டாரின் மகள்

இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை லட்சுமிமஞ்சு இணைந்துள்ளர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் என்பது தெரிந்ததே.

விஸ்வரூபம் 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்

ரோல்லிங் சார்! கார்த்தியின் அடுத்த பட படப்பிடிப்பு தொடங்கியது

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.