தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுகுழுவில் என்ன நடந்தது: விஷால் விளக்கம்
- IndiaGlitz, [Monday,December 11 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவின்போது ஒருசில தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக கோஷமிட்டதோடு, ஆண்டு அறிக்கை வாசிக்கும்போது சட்டமன்றத்தில் நடப்பது போல் மைக்குகளை பிடுங்குவது, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் பேசுவது, நிர்வாகிகளை அடிக்க முயற்சித்தது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பொதுகுழு முடிந்த பின்னர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுகுழுவில் சர்ச்சைக்குரிய நடந்த விஷயங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளது. நீதிபதி அவர்களின் பார்வையில் நடந்த இந்த பொதுகுழுவில் சில நபர்களால் நடக்ககூடாத விஷயங்கள் சில நடந்தது. இருப்பினும் பொதுக்குழு நல்லபடியாக முடிந்தது.
இந்த பொதுகுழுவில் ஒருசிலர் மட்டும் என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்க வேண்டிய நல்ல விஷயங்களுக்கு தடையாக உள்ளனர். மைக்கை பிடுங்கியது அடிக்க வந்தது உள்பட அனைத்து காட்சிகளும் வீடியோவாக பதிவாகியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டிய சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை பதிவு செய்ய வேண்டிய முறை தவறாக இருந்தது. எங்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்து பொதுகுழுவை சிறப்பாக நடத்த உதவிய காவல்துறையினர்களுக்கு எனது நன்றி. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் செய்வோம்