'சண்டக்கோழி 2' திடீர் டிராப். விஷால் கொடுத்த அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரண் நடித்த 'சண்டக்கோழி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விஷாலின் 'மருது' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தொடங்கப்படும் என உறுதியான தகவல் வெளிவந்த நிலையில் திடீரென இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இதுகுறித்து விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ""சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. 'சண்டக்கோழி 2' கைவிடப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் கதை விவாதம் உள்பட ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்திருக்கும் நிலையில் தற்போது திடீரென இந்த படம் டிராப் ஆகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஷால் தன்னுடைய படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
sad 2 c certain filmmakers lackin commitmnt twds projects.guess actors shd stick 2 actin n Dir s 2 directing.sandaikozhi 2 cancelled.GB
— Vishal (@VishalKOfficial) February 25, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com