நான் ஜல்லிக்கட்டு எதிரானவன் அல்ல. விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிகட்டு போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் பீட்டாவுக்கு எதிரான குரலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் பீட்டாவுக்கு ஆதரவு அளித்த திரையுலகினர் மீது கடுமையான விமர்சனம் பாய்ந்து வருகிறது. நடிகர் விஷால் பீட்டாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
பீட்டா என்பதன் விரிவாக்கமே எனக்கு சில நாட்களுக்கு முன்புதான் தெரிந்தது. நான் ஜல்லிக்கட்டை எதிர்க்கின்றேன் என்று கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன் என்றால் அதை எனது சமூக வலைத்தளத்திலோ, அல்லது பேட்டியிலோதான் தெரிவிப்பேன். எனது புகைப்படைத்தை போட்டு நான் சொல்லாத கருத்தை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.
இன்று இளைஞர்களின் போராட்டம் மத்திய அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக சென்றிருக்கும். அதனால் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன். இந்த வெற்றி இளைஞர்களின் வெற்றி. என்மீது தேவையில்லாத வதந்தி பரப்புவதை விட்டுவிட்டு போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதுதான் இப்போதைக்கு முக்கியம். மேலும் அடுத்த வருடம் ஜல்லிகட்டு முறையாக நடைபெற என்னால் முயன்ற உதவியை கண்டிப்பாக செய்வேன்.
இவ்வாறு விஷால் விளக்கமளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com