திரைப்படத்துறை வேலைநிறுத்தம்: விஷால் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், சமீபத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒருசில கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 30ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்தார்.
ஆனால் விஷாலின் இந்த வேலைநிறுத்த அறிவிப்புக்கு முதலிலேயே எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் எப்போதும் போல் 30ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு விஷாலுக்கு ஒரு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவெடுத்தனர்.
மேலும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி 28% திரையுலகிற்கும் பொருந்தும் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் அறிவிப்பு காரணமாக ஜூன் 30ஆம் தேதிக்குள் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை வெளியிட அனைத்து தயாரிப்பாளர்களும் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் தேவையில்லை என்றே பலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன்படி வருகிற 30-ந் தேதி முதல் நடக்கவிருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout