தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் வெற்றி

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை நடந்தது. இந்த தேர்தலில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால், கே.ஆர் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகள் போட்டியிட்டன

இந்த நிலையில் இன்று மாலை, பதிவான 1059 வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த விஷால் 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவராக விஷால் விரைவில் பதவியேற்கிறார்.

வெற்றி பெற்ற விஷாலுக்கு தயாரிப்பாளர்களும், திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் மற்ற பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

More News

சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை? என்னதான் நடக்குது

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் என்பதும், ஆதார் அட்டை இல்லையென்றால் பல அடிப்படை சலுகைகளை இழக்க நேரும் நிலையும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டையை பெற்று வருகின்றனர்...

ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்த ஆனந்த யாழ்'. முத்துகுமாருக்கு புகழாரம்

மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய 'ஆனந்த யாழ்' என்ற பாடல் ஒவ்வொரு தந்தையின் மனதிலும் ஊடுருவி ஒரு இன்ப அனுபவத்தை கொடுத்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தயாரிப்பாளருக்கு ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது...

'தளபதி 61' டைட்டில்: ஆறில் ஒன்றுதான் 'மூன்றுமுகம்'. படக்குழுவினர் விளக்கம்.

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என கடந்த சில மணி நேரங்களாக சமூக இணையதளங்களில் ஒரு போஸ்டர் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே 'தளபதி 61' படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்பட்டது...

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டில்?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட

கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி

சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்...