தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் வெற்றி

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை நடந்தது. இந்த தேர்தலில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால், கே.ஆர் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகள் போட்டியிட்டன

இந்த நிலையில் இன்று மாலை, பதிவான 1059 வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த விஷால் 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவராக விஷால் விரைவில் பதவியேற்கிறார்.

வெற்றி பெற்ற விஷாலுக்கு தயாரிப்பாளர்களும், திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் மற்ற பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.