வேலைநிறுத்த முடிவுக்கு பின்னர் நடக்கும் முதல் திரைப்பட விழா

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திய வேலைநிறுத்தம் 47 நாட்களாக வெற்றிகரமாக தொடர்ந்து, கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் நாளை முதல் புதிய படங்கள் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தயாரிப்பாளர் ச்ங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். நாளை கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' உள்பட ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தின் முடிவுக்கு பின்னர் முதல் சினிமா விழாவாக வரும் 25ஆம் தேதி சென்னையில் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடித்த Mr.சந்திரமெளலி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விஷாலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் திரு இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
 

More News

சிஎஸ்கே போட்டியை பார்க்க புனேவுக்கு சென்ற சென்னை ரசிகர்கள்

சென்னையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தபோது ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகை சேர்ந்த சிலரும் நடத்திய போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தல அஜித்தின் சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி

'காலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தின் விவேகம் சாதனையை ரஜினியின் 'காலா' திரைப்படம் முறியடித்துள்ளது.

ரஜினியின் 'காலா' ரிலீஸ் எப்போது? விஷால் தகவல்

நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .

50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால் 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது. 

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எச்.ராஜாவின் டுவீட்

எச்.ராஜா, சமீபத்தில் பெரியார் குறித்து பதிவு செய்த டுவீட் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்த டுவீட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அந்த டுவீட் அவருடைய அட்மினால் போடப்பட்டது என்று சமாளித்தார்