சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. 'ரத்னம்' ரிலீஸ் நாளில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு விஷால் எச்சரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
ஒருவழியாக கட்டப் பஞ்சாயத்து எந்த வித பயம், நெருடல் இன்றி நடந்து வருகிறது. தமிழ் சினிமாவும், அதன் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தில் உள்ளனர்.
திருச்சி, தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம், ஒரு மிகப்பெரிய தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி உள்ளீர்கள். ஆனால் இது என்னைப் போன்ற ஒரு போராளியுடன் முடிந்து போகும்.
கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் உங்களை நான் சட்டத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுத்திருப்பேன். ஏனெனில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் என்ற ஒன்று உள்ளது. அவர்கள் யாரும் பொழுதுபோக்குக்காக படம் எடுக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். பல்வேறு தயாரிப்பாளர் சங்கங்களுக்கு எனது நன்றி. எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். அனைவருக்கும் இது ஒரு வெட்கக்கேடு.
நடிகர் சங்க பொதுச் செயலாளராகவோ, ஒரு நடிகனாகவோ, தயாரிப்பாளராகவோ அல்ல, ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக, வியாழக்கிழமை மாலை, தன்னுடைய குழந்தையை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்க காத்திருப்பது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததன் மூலம் இதனை பதிவு செய்கிறேன்’ என்று விஷால் காட்டமாக பதிவு செய்துள்ளார்.
And finally #kattapanchayath is up and going without any fear or remorse which means that Tamil cinema and Tamil cinema producers in particular are in for a rollercoaster ride this year. Dearest executive members of #TTAREA theatre association u hav created a very big impact by…
— Vishal (@VishalKOfficial) April 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments