சேரனின் செயல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை: விஷால்

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

இயக்குனர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன. என் மீது தவறு இருந்து அதை சுட்டிக்காட்டினால் திருத்தி கொள்வேன். ஆனால் சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு

ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கின்றேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.

எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சி கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதும் மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்

என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்பட்டி சந்திக்க தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்க முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். 

சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகளின்படி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

More News

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

ஸ்கூபா விளையாடிய போது விபரீதம்: இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் பலி

அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குனராக செயல்பட்டு வந்த 49 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், ஸ்கூபா விளையாடியபோது சுறா மீன் தாக்கியதால் பரிதாபமாக பலியானார்.

மணிரத்னம்-சிம்பு படம் என்ன ஆச்சு? 

சமீபத்தில் சிம்பு மீது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கடுமையான புகார்களை பத்திரிகையாளர் முன் பதிவு செய்தனர்.

தமிழகத்தை நோக்கி மீண்டும் புயலா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதாவது இன்றும் நாலையும் கனமழை பெய்யும்

ஒரே நாளில் மக்கள் தீர்ப்பும், நீதிபதியின் தீர்ப்பும்

இம்மாதம் 21ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மக்கள், தங்களுடைய தொகுதியின் எம்.எல்.ஏ யார் என்பதை முடிவு செய்ய வாக்களிக்க காத்திருக்கின்றனர்.