படப்பிடிப்பில் விஷால் படுகாயம்: டாக்டர்கள் விரைந்தனர்

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
அதிரடி சண்டைக்காட்சிகளுடன் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் விஷால் டூப் இன்றி நடித்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன்னர் விஷாலுக்கு படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு ஒன்று படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னரே படப்பிடிப்பு தொடருமா? என்பதை உறுதி செய்ய முடியும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கணியன் பூங்குன்றனார் என்ற கேரக்டரில் விஷால் நடித்துள்ள இந்த படத்தில் பிரசன்னா, வினய், அனு இமானுவேல், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ், தலைவாச விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

யார் இந்த ஆரவ்? சில தெரியாத, புரியாத தகவல்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக கலகலப்பும் கைகலப்புமாக இருந்தது. குறிப்பாக ஓவியா-ஆரவ் ரொமான்ஸ் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் திடீரென ஆரவ் காதல் இல்லை, தான் கொடுத்த முத்தம் கூட மருத்துவ முத்தம் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்ச்குள்ளாக்கியது...

ரைசா தலைவரா? ஜீரணிக்க முடியாத சக்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரும், சூப்பர் வில்லியும் வெளியேறிவிட்ட நிலையில் இந்நிகழ்ச்சி குறித்த ஆர்வம் சற்று குறைந்துள்ளது...

ஓவியாவின் கெளரவத்தை காப்பாற்றிய கமலுக்கு நன்றி தெரிவித்த நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேயர்கள் மட்டுமின்றி திரையுலகினர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

'விஐபி 2' ரன்னிங் டைம் மற்றும் கதைச்சுருக்கம்

தனுஷ், அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சிங்கப்பூர் சென்சார் P13 என்ற சான்றிதழ் கொடுத்துள்ளது.

ரஜினியுடன் முன்னாள் மத்திய அமைச்சரின் மகள் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் அவரை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.