வெளியானது விஷாலின் அடுத்த படத்தின் டிரைலர்

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பணிகள், தங்கையின் திருமணம் ஆகியவற்றின் பிசியிலும் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' என்ற மலையாள படத்தில் விஷால் முதல்முறையாக வில்லனாக நடித்து வருகிறார்.

'வில்லன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படத்தில் விஷால் தமிழிலேயே வசனம் பேசியுள்ளார் என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

மோகன்லால், விஷால், மஞ்சுவாரியர், ஹன்சிகா, சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ரஜினியின் 'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பிக் ஸ்டார்' ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு மாதம் மட்டுமே இருந்த ஓவியா, இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிய ஓவியா, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்...

சட்டையை மாற்றினாலும் பாம்பு பாம்புதான்: ஜூலி குறித்து ஆர்த்தி

பிக்பாஸ் பார்வையாளர்களால் அதிகளவு வெறுக்கப்பட்ட ஜூலி மீண்டும் ரீஎண்ட்ரி ஆனது ஏற்கனவே தள்ளாடி கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ளது...

பெனாசிர் பூட்டோ வழக்கில் திடீர் திருப்பம்: பர்வேஸ் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்...

நீங்கள்தான் எங்கள் நிரந்தர கேப்டன்: தோனிக்கு விராத் புகழாரம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணியின் அபார வெற்றி மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது...

ரஜினியின் 'காலா' படப்பிடிப்பு இன்று முதல் திடீர் ரத்து

ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் ரஜினியின் 'காலா' உள்ளிட்ட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....