இந்த மாத்திரையால் தான் குணமானேன்: விஷாலின் பரபரப்பு வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து குணமாகினர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தனக்கு எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, அதிலிருந்து குணமாகி எப்படி மீண்டு வந்தோம் என்பது குறித்து விஷால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: முதலில் எனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது எங்களுக்கு புரியவில்லை. இருப்பினும் 82 வயதான அவரை நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கவனித்து வந்தோம். மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை அளித்து வந்தோம். அவரை கவனித்துக் கொள்ளும் பணியில் இருந்ததால் எனக்கும் கொரோனா அறிகுறி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை, சளி, இருமல் ஆகியவை இருந்ததால் நானும் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் இருந்த மேலாளருக்கும் அதேபோல் பாதிப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து நாங்கள் மூவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டோம். மருத்துவரின் பரிந்துரையின்படி அவர் அளித்த மாத்திரைகளை சாப்பிட்டு நாங்கள் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்தோம். இந்த நிலையில் நான் உங்களிடம் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொரனோ வைரஸிடம் இருந்து குணமாக ஒரு மாத்திரை மிகவும் முக்கியமானது. அதுதான் பயமில்லாமல் இருப்பது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தயவு செய்து யாரும் பயப்பட வேண்டாம். மன தைரியம் தான் இந்த நோய்க்கு முக்கியமான மருந்து. கொரோனாவால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்று மன தைரியத்துடன் மருத்துவர்கள் தரும் மாத்திரைகளை சாப்பிட்டால் நிச்சயம் கொரோனாவில் இருந்து விடுபட முடியும். கொரோனா வந்துவிட்டதே என பயந்தால், மருத்துவர்கள் தரும் மருந்து, மாத்திரை வேலை செய்யாது. எனவே தயவுசெய்து யாரும் கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்
மேலும் ஆயுர்வேத சிகிச்சை ஓரளவிற்கு நல்ல மருந்தாக உள்ளது. நான் ஆயுர்வேதத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்றோ, ஆயுர்வேத டாக்டர்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்றோ, சொல்லவில்லை. அதே நேரத்தில் மற்ற மருத்துவர்கள் எதிரியும் இல்லை. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும், சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை கூறுகிறேன். இப்போது கூட இதனை கூறவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது’ என்று விஷால் அந்த வீடியோவில் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments