உங்கள் காலை தொட்டு கும்பிட்டு இருக்க வேண்டும்.. அமெரிக்காவில் இருந்து விஷாலின் கண்ணீர் வீடியோ..
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர், புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்த் இன்று காலமான நிலையில் கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
கேப்டன் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் உங்கள் பக்கத்தில் இந்த நேரத்தில் இருந்து உங்கள் முகத்தை பார்த்து உங்களுக்கு காலை தொட்டு கும்பிட்டு இருக்க வேண்டும்.
நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. உங்களை பார்த்து தான் நாங்கள் நல்லது செய்ய கற்றுக் கொண்டோம். உங்கள் அலுவலகத்திற்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்புவீர்கள். ஒரு அரசியல்வாதி, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி என்பதைவிட ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதை நினைத்து என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை
ஒரு நல்ல மனிதராக பெயர் வாங்குவது சுலபமில்லை, அதுமட்டுமின்றி ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பெயர் நீடித்து நிற்கும். என்னை மன்னித்து விடுங்கள், சத்தியமாக சொல்கிறேன், நான் உங்கள் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும், உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்’ என்று விஷால் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
I have nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and… pic.twitter.com/pMYAblLOdV
— Vishal (@VishalKOfficial) December 28, 2023
Immerse Yourself in the Melodies of Vijayakanth!
Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com