சீமக்கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கையில் விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகவும் முக்கியமானது சீமக்கருவேல மரங்கள். பொன் விளையும் பூமியை மலடாக்கும் அபாயம் இந்த சீமக்கருவேல மரங்களால் உண்டு என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இடையே பரப்பி வருகின்ரனர். குறிப்பாக மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள், ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் சீமக்கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சியில் ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொது மக்களுடன் சேர்ந்து அந்த கிராமத்தில் பலவருடங்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்கள். மேலும் அந்த இடங்களை சுத்தம் செய்து நாட்டு மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.
நடிகர் விஷால் அவர்களுடன் நடிகர் செளந்தர்ராஜா, ஹரி அவர்களும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அண்ணாமலை பல்கலை கழக துணை வேந்தர் மணியன், கல்வி இயக்குனர் மணிவண்ணன், கிராமத் துறை தலைவர் தேசிகன், பாலமுருகன் இவர்களுடன் NSS மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், கடலூர் மாவட்ட நாடக சங்க உறுப்பினர்கள், ஊர் பொது மக்கள், விஷால் நற்பணி இயக்கத்தின் நிருவாகிகள் கலந்து கொண்டு இந்த சமுக பணியில் ஈடுபட்டார்கள்.
இதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சீமக்கருவேல மரங்களை அழித்துவிட அனைத்து தரப்பினர்களும் ஒன்றுசேர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com