டார்லிங் வரலட்சுமியை பாராட்டிய விஷால், கலாய்த்த ஆர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பல ஆண்டுகள் கூறப்பட்டு வந்தபோதிலும் இருவரும் இன்னும் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. நடிகர் சங்க கட்டிடடம் கட்டி முடித்தவுடன் தான் திருமணம் என்று விஷால் கூறியிருப்பதால் அவரது திருமண தேதியின்போதுதான் அவர்களது காதல் உறுதி செய்யப்படும்
இந்த நிலையில் விஷால், வரலட்சுமி நடித்து கொண்டிருக்கும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரலட்சுமியின் காட்சிகள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதனை ஒரு சிறு விழாவாக படக்குழுவினர் கொண்டாடி அவரை வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரலட்சுமியின் பகுதி முடிந்துள்ளது. படத்திற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பிற்கு நன்றி. டார்லிங் வரலட்சுமி நான் பார்த்த நடிகைகளில் திறமையானவர்களில் ஒருவர் என்று கூறிவிட்டு 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் அக்டோபர் 18ல் வெளியாகும் என்று பதிவு செய்திருந்தார்.
விஷாலின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள ஆர்யா, 'மச்சான் இதை நீ டைப் செய்தியா? இல்லை வருவா? என்று கலாய்த்துள்ளார்.
Wow. Coming to the final leg of shoot for #sandaikozhi2 n #pandemkodi2 it’s a wrap for @varusarath.its gonna be a Gud one.killer climax fight.:) :) thank u so much darling Varu. one of the most professional actresses I’ve come across. Lookin fwd to #oct18.god bless pic.twitter.com/ABgfxyMp8m
— Vishal (@VishalKOfficial) August 5, 2018
Macha did u type it or Varu ???????????????? https://t.co/c5TqdZ4V06
— Arya (@arya_offl) August 5, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments