என்னால் நம்பவே முடியவில்லை: ரித்தீஷ் மரணம் குறித்து விஷால்

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் சற்றுமுன் ராமநாதபுரத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி திரையுலகில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முதல் மாரடைப்பிலேயே ரித்தீஷ் மரணம் அடைந்தது குறித்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும் ரித்தீஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அவருடைய மறைவு குறித்து கூறியதாவது:

வாழ்க்கை என்பது எதிர்பாராததன் உச்சம். என்னுடைய நல்ல நண்பர் ரித்தீஷின் மரணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. பெரும் அதிர்ச்சியாக உள்ளது. நடிகர் சங்க தேர்தலின்போது அவரை பற்றி நன்கு புரிந்து கொண்டேன். ரித்தீஷை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். கடவுள் அவர்களுக்கு உறுதியான மனதை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ரித்தீஷின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

More News

ரித்தீஷ் இதயத்தில் மீண்டும் துடிப்பு இருந்ததா? பரபரப்பு தகவல்

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷீக்கு இன்று பிற்பகலில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்

அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்: வைரலாகும் ரஜினி பேரனின் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளின் மகன் வேத் புகைப்படங்கள் ஒருசில சமூக வலைத்தளத்தில் வைரலானது. ரஜினியின் ஸ்டைலில் இருக்கும்

நடிகர், அரசியல்வாதி ஜே,.கே.ரித்திஷ் காலமானார்

முன்னாள் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46

சூர்யா-சுதாகொங்காரா படத்தின் வித்தியாசமான டைட்டில்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தையின் உயிரைப் பறித்த பிரியாணி!

5 வயது சிறுமி,  பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.