ஆண்டவா! அராஜகத்தில் இருந்து என் அன்பான நாட்டை காப்பாற்று: விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை தேர்தல் கமிஷன் வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்டது விஷாலின் விஷயத்தில் தான். இதிலிருந்தே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அராஜகத்தில் இருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள் என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஜனநாயகம் அதன் தலையை மீண்டும் உயர்த்துவதற்காக காத்திருக்கிறது. ஆண்டவா! இங்கு நடக்கும் அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள்' என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் முதலின் முன்மொழிந்து பின் மறுத்த இரண்டு நபர்கள் இன்று மதியம் மூன்று மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தால் விஷாலின் வேட்புமனு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுஜ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments