இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்? விஷால் வேதனை

  • IndiaGlitz, [Thursday,November 02 2017]

சென்னையில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ளம், உயிர்ச்சேதம் ஏற்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த 2015ஆம் வருடம் கனமழை மற்றும் பெருவெள்ளத்தாலும், 2016ஆம் ஆண்டு வர்தா புயல் காரணமாகவும் சென்னை பலத்த சேதம் அடைந்ததோடு ஒருசில உயிர்களையும் பலிவாங்கியது. தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் இந்த நிலை எப்போது மாறும் என்ற கவலை சென்னைவாசிகள் இடையே உள்ளது. இந்த நிலையில் நாம் இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்? என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு முறையும், இயற்கைப் பேரிடர் சமயங்களில் - அது பெருமழையோ, புயலோ, வெள்ளமோ.. - இப்படி ஒரே காரணத்திற்காக நிகழும் மரணங்களைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

விவசாயிகள் இறக்கிறார்கள், அப்பாவி பொதுஜனம் மழைக் காலங்களில் மின்சாரம் தாக்கி இறக்கிறார்கள்.ஒரே நிலையை நாம் எத்தனை காலம் எதிர்கொள்ளப் போகிறோம்? நம் தவறுகளைத் திருத்திக் கொண்டு, மீண்டும் அவை நிகழாமல் தடுக்க வேண்டாமா?

நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்? நமது நகரம் இன்னும் சீராகவில்லை, இந்த கஷ்டங்களை எதிர்கொண்டு, இதுபோன்ற காலங்களில் நிகழும் மரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றா? இது சோகமயமானது, வேண்டாதது.. இதுபோல் இதுவரை பலமுறை நடந்துள்ளது.

இவற்றை நாம் போர்க்கால அடிப்படையில் அணுகாததால், நாம் சென்னையை இது போன்ற பெருமழை, புயல்,வெள்ளத்தை எதிர்கொள்ளும் நிலையில் வைத்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வைக்க, நாம் இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்?

இது குற்றம். தவறு அல்ல.. குற்றம்'' என்று விஷால் கூறியுள்ளார்.

More News

ஆர்.கே.சுரேஷ் படத்தில் அஜித் பாடல்

கோலிவுட் திரையுலக நடிகர்களின் பல படங்களில் தல அஜித்தின் பாடல்கள், போஸ்டர்கள், பேனர்கள் இணைக்கப்பட்டு வந்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் மெர்சல்'  வசூல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வசூல் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை

கொடுங்கையூர் கொடுஞ்சாவிற்கு கமல்ஹாசன் கண்டனம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும்

பிரபல தமிழ் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: தாயார் குற்றச்சாட்டு

மனுநீதி, சூப்பர் குடும்பம், தவசி, காதல் பூக்கள், சவுண்ட் பார்ட்டி ஆகிய தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பிரதியூஷா. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்

கோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1

கோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1