பூட்டை உடைக்க விஷால் முயற்சி! பரபரப்பில் தயாரிப்பாளர் அலுவலகம்
- IndiaGlitz, [Thursday,December 20 2018]
நேற்று ஒருசில தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தின் முன் நின்று விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியதுடன் சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இன்று தமிழக முதல்வரை தயாரிப்பாளர்கள் சிலர் பாரதிராஜாவின் தலைமையில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வந்த நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று போடப்பட்ட பூட்டை அகற்ற முயற்சி செய்தார். ஆனால் தயாரிப்பாளர்கள் அலுவலக வாசலில் நிற்கும் போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை. இதனால் போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்து வருகிறார்.
நாளை 7 படம் வெளியாகவுள்ளது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் உள்ளே செல்ல தன்னை அனுமதிக்குமாறு வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்து வருகிறார். இதனால் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.