பழம்பெரும் நாடக நடிகைக்கு விஷால் உதவி

  • IndiaGlitz, [Wednesday,August 10 2016]

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நாடக, மற்றும் சினிமா கலைஞர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றது என்பதை அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் விஜயராகவாபுரம் என்ற பகுதியை சார்ந்த பழம்பெரும் நாடக நடிகை திருமதி உமா, கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவு காரணமாகவும், வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்றியும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார் என்ற தகவல் நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு சமீபத்தில் கிடைத்தது.
இந்த தகவல் கிடைத்தவுடன், விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நாடக நடிகை உமாவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார். நடிகை உமாவும், அவருடைய குடும்பத்தினர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி கூறியுள்ளனர்.