விஷால் படத்தை இயக்கும் வித்தியாசமான இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,February 28 2016]

கோலிவுட் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி வரும் தரமான இயக்குனர்களில் ஒருவராகிய இயக்குனர் மிஷ்கின் தற்போது 'சவரக்கத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடைய உதவியாளர் இயக்கி வரும் இந்த படத்தை அடுத்து மிஷ்கின், விஷால் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

'மருது' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த விஷால் அடுத்ததாக 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்கவிருந்த நிலையில் அந்த படம் திடீரென டிராப் ஆனது. இதையடுத்து விஷாலின் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அவர் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் நாயகி மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வில் மிஷ்கின் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் மிஷ்கின் பாணியில் உருவாகவுள்ள க்ரைம் த்ரில்லர் என்றும் விஷாலுக்கு இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான வேடம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.