இன்று முதல் உதயமாகும் பிரபல நடிகரின் அரசியல் கட்சி?

  • IndiaGlitz, [Wednesday,August 29 2018]

கோலிவுட் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் கமல், ரஜினி வரை பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். கடந்த அரை நூற்றாண்டாக தமிழகத்தை திரையுலகை சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வந்துள்ளனர். இதனால் பல திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று அனுபவம் உள்ள நடிகர் விஷால் இன்று முதல் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று 'இரும்புத்திரை' 100வது நாள் விழாவில் விஷால் தனது ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் அமைப்பாக அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு புதிய கொடியை அவர் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல், ரஜினியை அடுத்து அரசியலில் அடியெடுத்து வைக்கும் அடுத்த முயற்சியை இன்று முதல் தொடங்கவுள்ள விஷாலுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல் அரசியல் உலகிலும் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரஜினி, அஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவரது உறவினர்களும் திமுகவினர்களும் இன்னும் சோகத்தின் பிடியில் இருந்து மீளாமல் உள்ளனர்.

அவர்களெல்லாம் அஜித்தின் காலைக் கழுவி வணங்க வேண்டும்: பிரபல நடிகை

தல அஜித் என்றாலே அனைவருக்கும் பிடிக்க ஒரு முக்கிய காரணம் அவரது மனிதநேயம், உதவி செய்யும் குணம் மற்றும் எளிமை என்பது அனைவரும் அறிந்ததே.

மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அம்மா: பாலாஜி நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களாக ரணகளமாக இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் செண்டிமெண்ட் நிரம்பி வழிகிறது. குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களின் வீடுகளில்

கார் விபத்தில் பிரபல நடிகரின் தந்தை மரணம்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா