ஒரே மாதத்தில் இரண்டு விஷால் படங்கள் ரிலீஸ்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய த்ரில் திரைப்படம் 'துப்பறிவாளன்' வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளதால் இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் 87 திரையரங்குகளுக்கும் அதிகமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் இந்த படம் 350 திரையரங்குகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் - விஷால் முதல்முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இமானுவேல், வினய்ராய் மற்றும் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இதே மாதத்தில் அதாவது இம்மாதம் 28ஆம் தேதி விஷால் நடித்த முதல் மலையாள திரைப்படமான 'வில்லன்' திரைப்படமும் வெளியாகவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மோகன்லால், மஞ்சுவாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் வில்லனாக நடித்துள்ளார். ஒரே மாதத்தில் இரண்டு விஷால் படங்கள் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More News

த்ரிஷாவின் முன்னாள் காதலரின் திருமணம்

பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் மற்றும் நடிகை த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

ராய்லட்சுமி நடித்த 'ஜூலி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

கோலிவுட் நடிகை ராய்லட்சுமி அறிமுகமாகியுள்ள பாலிவுட் திரைப்படமான 'ஜூலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

காணாமல் போய் 5 நாட்கள் ஆகியும் கிடைக்காத லலிதகுமாரியின் உறவுப்பெண்

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி..

விஜய்சேதுபதியின் ஜல்லிக்கட்டுக்கு குறிக்கப்பட்ட நாள்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'கவண்', 'விக்ரம் வேதா' மற்றும் 'புரியாத புதிர்' ஆகிய மூன்று படங்கள் ஏற்கனவே இந்த ஆண்டு வெளிவந்துவிட்டது. இவற்றில் கவண் மற்றும் விக்ரம் வேதா சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

பாரதியின் புரட்சி விதை இனியேனும் விதி செய்யுமா? கமல்ஹாசன்

மகாகவி பாரதியாரின் 96வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் பாரதியாரின் தீவிர ரசிகரான உலக நாயகன் கமல், பாரதியை குறிப்பிட்டு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.