ரஜினி கட்சி, கமல் கட்சி யாருக்கு ஆதரவு? விஷால் பதில்

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன் ரசிகர்களை சென்னையில் சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார். அவருடைய அரசியல் அறிவிப்பு 'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனும் நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்த கவிதையால் அவரிடம் இருந்து எந்த நேரத்திலும் அரசியல் குறித்த அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ரஜினி, கமல் இருவருமே கட்சி ஆரம்பித்தால் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, 'ரஜினி, கமல் இருவருமே அதிகாரபூர்வமாக அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்பதை கூற முடியும். அதற்கு முன் யாருக்கு ஆதரவு என்று கூறுவது சரியாக இருக்காது' என்று கூறினார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனையில் கமல்ஹாசனுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றும் அவர் பின்னால் திரையுலகினர் திரண்டு நிற்பது உறுதி' என்றும் கூறினார்.

More News

ஆன்லைன் பைரசி: குற்றவாளியின் முகத்திரையை கிழிக்கப் போகும் விஷால்

நடிகர் விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சற்று முன் நடந்தது.

தனுஷுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது உண்மைதான்: செளந்தர்யா ரஜினிகாந்த்

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயார்: ரஜினி மகள் அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் என்று கூறலாம். ரஜினி சூப்பர் ஸ்டார் நடிகராக, அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, இளையமகள் செளந்தர்யா இயக்குனர்களாக, மருமகன் தனுஷ் நடிகராக உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பரணி! வைல்ட் கார்ட் உண்டா?

விதிமுறைகளை மீறியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் பரணி, தனது மனைவி, குழந்தைகளை பார்ததவுடன் மகிழ்ச்சியில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

கமல்-ரஜினி சந்திப்பால் அரசியல் திருப்புமுனை ஏற்படுமா?

திரைப்படத்தில் கூட இணைந்து இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்த கமல், ரஜினி அரசியலில் ஒன்று சேரும் காலம் கனிந்துவிட்டதாக கூறப்படுகிறது...