துப்பறிவாளன், மகளிர் மட்டும் படங்களின் தமிழக வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

கடந்த வாரம் வெளிவந்த விஷாலின் 'துப்பறிவாளன்' மற்றும் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலையும் பெற்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் தமிழக வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. விஷாலின் 'துப்பறிவாளன்' கடந்த 11 நாட்களில் தமிழகத்தில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.2.86 கோடியும், கோவையில் ரூ.3.2 கோடியும், செங்கல்பட்டில் ரூ.5.2 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.70 லட்சமும் வசூல் செய்துள்ளது.

அதேபோல் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் கடந்த 10 நட்களில் சென்னையில் ரூ.1.72 கோடியும், கோவையில் ரூ.2.1 கோடியும், செங்கல்பட்டில் ரூ.3.3 கோடியும் வசூல் செய்துள்ளது. 

ஒட்டுமொத்த தமிழக வசூலை பொருத்தவரையில் இரு படங்களுமே சராசரி வசூலை பெற்று விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லோக்கல் சரக்கா? ஃபாரின் சரக்கா? வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக நடித்த பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனும், தனுஷின் நண்பருமான விஜய்ஜேசுதாஸ் தற்போது 'படைவீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தோனியின் காதலி

சுந்தர் சியின் கனவு திரைப்படமான 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ரோலில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார்.

விஸ்வரூபம் 2, 'சபாஷ்நாயுடு' முடிந்த பின்னர் தான் அரசியல்: கமல்ஹாசன்

கமல்ஹாசன் வெகுவிரைவில் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வரவிருப்பதாகவும், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் குறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம் காலமானார்

ஏராளமான நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பழம்பெரும் குணசித்திர நடிகர் பீலிசிவம் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. 

நயன்தாராவின் 'அறம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'அறம்' ....