தமிழக அமைச்சரின் அதிரடி அறிவிப்புக்கு நன்றி கூறிய விஷால்

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

தமிழ் திரைப்படவுலகம் கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகிறது. புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்பது முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்ளிட்ட எந்த பணியும் நடைபெறாமல் நடைபெற்று வரும் ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தால் திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 'திரைப்படத்துறைக்கு என தனி வாரியம்' வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் வாரியம் அமைக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் அறிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, 'தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன், திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்' என்று விஷால் கூறியுள்ளார்.

More News

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைபற்றி தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் நிர்வாண வீடியோ

2002ஆம் ஆண்டு வெளிவந்த 'யுனிவர்சிட்டி' என்ற ஒரே தமிழ் படத்தில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் ராதிகாரெட்டி. இவர் நேற்றிரவு ஐதராபாத்தில் திடீரென தனது ஐந்தாவது மாடி வீட்டில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மிஸ் இந்தியா அழகியுடன் டேட்டிங் செல்லும் அஜித்-விஜய் பட நடிகர்

அஜித் நடித்த 'மங்காத்தா' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய படங்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகர் மகத். இவர் வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களிலும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வரலாறு காணாத விலையுயர்வில் பெட்ரோல்-டீசல்

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.