இன்னிக்கு நான் நிம்மதியாக தூங்குவேன்.. 'மார்க் ஆண்டனி' வெற்றி குறித்து விஷால்..!

  • IndiaGlitz, [Saturday,September 16 2023]

விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக இந்த படம் முதல் நாளே நல்ல வசூலை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் சோலோவாக போட்டியின்றி ரிலீஸ் ஆனதால் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி விடுமுறை உட்பட இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த படத்தின் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு நாங்கள் என்னதான் உழைத்தாலும், ரசிகர்களாகிய தெய்வங்கள் மற்றும் மேலே இருக்கிற தெய்வங்கள் காரணமாக வெற்றி கிடைத்துள்ளது.

நல்ல படம் என்ற வார்த்தையை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தை பார்த்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எங்களது நன்றி. குறிப்பாக இந்த படத்திற்கு எங்களுக்கு உதவி செய்த கார்த்தி, வெங்கட் பிரபு, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்களுக்கு எங்கள் நன்றி.

ஒன்றரை வருட உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்துள்ளதால் இன்று இரவு நான் நிம்மதியாக தூங்குவேன். அதேபோல் நான் ஏற்கனவே கூறியபடி ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் உங்கள் சார்பாக விவசாயிகளுக்கு தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்.. சென்னையில் ஒரு புதிய முயற்சி..!

 முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் வாரிசுகளான கலாநிதி மாறன் சன் நெட்வொர்க் தொடங்கி ஆரம்பம் முதலே தொழிலதிபராக உள்ளார். ஆனால் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே

நயன்தாரா அடுத்த படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. விரைவில் ரிலீஸ்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த 'ஜவான்' திரைப்படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த

திரையில் ரிலீஸ் ஆகும் முன்பே போட்ட முதலீட்டை எடுத்துவிட்ட ஜெயம் ரவி படம்.. மகிழ்ச்சியில் படக்குழு..!

ஜெயம் ரவி நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரைக்கு வெளியாகும் முன்பே இந்த படத்தின் வியாபாரத்தின் சில பகுதி முடிந்து, செலவு செய்த பணத்தை

விஜய் சேதுபதியும் இல்லை, துருவ் விக்ரமும் இல்லை.. ஜேசன் சஞ்சய் முதல் ஹீரோ இவர்தான்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதும் இதனை அடுத்து ஜேசன்

15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாடல்.. இணையத்தில் லீக் ஆனதால் ஷங்கர் அதிர்ச்சி..!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் 15 கோடி ரூபாய் செலவில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்ட நிலையில் அந்த பாடல் கட்சியின் சில பகுதிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளதை