close
Choose your channels

இதைவிட பெஸ்ட் பிறந்த நாள் எனக்கு இல்லை: விஷால் வீடியோ வைரல்

Wednesday, September 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் விஷால் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு உலகெங்கிலுமிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை அடுத்து நன்றி கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது:

உலகம் முழுவதும் உள்ள எனது நண்பர்கள் மற்றும் திரையுலகினர் தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்துக்கு எனது நன்றி. நான் உங்களுடைய வாழ்த்துக்களால் உற்சாகம் அடைந்தேன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற சொல்லில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த வகையில் நான் எனது பிறந்தநாளன்று ஏழை குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று பிறந்தநாளை கொண்டாடியது எனக்கு பாக்கியமாக கருதுகிறேன். இதைவிட எனக்கு பெஸ்ட் பிறந்த நாள் இல்லை.,

அதேபோல் என்னுடைய சொல்லை கேட்டு என்னுடைய ரசிகர்கள் போஸ்டர் அடித்து வீண் செலவு செய்யாமல், அந்த பணத்தில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளித்த தகவல் எனக்கு வந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இதை விட வேறு சந்தோசம் எனக்கு இல்லை.

உங்கள் அனைவரும் ஆசீர்வாதத்தால் என் பிறந்தநாளன்று புது படத்தை ஆரம்பித்தேன். இதேபோன்று இன்னும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அந்த ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதே போல் என்னை வாழ்த்திய குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கண்டிப்பாக என்னால் முடிந்த உதவியை செய்வேன். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்’ என்று நடிகர் விஷால் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment