விஷாலின் அட்வான்ஸ் ஐடியாவுக்கு மாஸ் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடன், முழு ஈடுபாடுடன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் விஷாலுக்கு அவ்வப்போது திரைத்துறையிலேயே மறைமுகமாக பல்வேறு இடைஞ்சல்கள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நல்லது செய்பவர்களுக்கு வரக்கூடிய வழக்கமான இடைஞ்சல்களை புறந்தள்ளி விஷால் குழுவினர் வெற்றிகரமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் முக்கிய செலவை குறைக்க விஷாலின் மனதில் ஒரு அட்வான்ஸ் ஐடியா தோன்றியுள்ளதாம். அதாவது ஒரு படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்க கமிட் ஆகும்போது அட்வான்ஸ் தொகையாக ஒரு பெரிய தொகையை பெற்றுக்கொள்கின்றனர். அந்த படம் முடிய ஆறு மாதம் அல்லது ஒரு வருடமோ ஆகும் நிலையில் அந்த பெரிய தொகைக்கு வட்டியே இன்னொரு பெரிய தொகையாக மாறிவிடுகிறதாம்.
இது தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவாக இருப்பதால், பெரிய நடிகர்கள் அவர்களது மார்க்கெட்டுக்கு தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு மீதியை ரிலீசுக்கு முன்னர் மொத்தமாக பெற்று கொள்ள வேண்டும் என்பதே விஷாலின் வேண்டுகோளாம். இந்த அட்வான்ஸ் ஐடியாவிற்கு விஷாலின் ஆதரவாளர்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், கோலிவுட்டின் மாஸ் நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com