விஷாலின் 'கத்திச்சண்டை' படத்திற்கு இன்னொரு டைட்டில்

  • IndiaGlitz, [Tuesday,July 26 2016]

சமீபத்தில் வெளியான 'மருது' வெற்றி படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் அடுத்த படம் 'கத்திச்சண்டை'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு மற்றும் தருண் அரோரா வில்லன்கள் கேரக்டர்களில் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிக்கும் இந்த படத்தில் சூரியும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Okadochaadu என்பதே இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் ஆகும். விஷாலின் படங்கள் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வசூலை செய்து வருவதால் இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த 'ஆம்பள' மற்றும் 'கதகளி' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதர்வாவின் 'போதை' படத்தில் பாலியல் தொழிலாளி

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது 'செம போதை ஆகாதே'...

'எந்திரனை' விட இருமடங்கு. 'கபாலி'யின் அசைக்க முடியாத சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

'அஜித் 57' படத்தின் நீளமான ஷூட்டிங் பிளான்

தல அஜித் நடிக்கும் 57 வது படமான 'ஏகே 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

'குக்கூ' இயக்குனரின் 'ஜோக்கர்' சென்சார் தகவல்

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...

உயிர் நண்பருக்காக 'கபாலி' ஸ்பெஷல் காட்சி: ரஜினி திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...