விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,October 14 2016]

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
53 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரின் மூலம் இந்த படம் ஆக்சன் பட ரசிகர்களுக்கான விருந்து என்பது தெளிவாகிறது. 'தப்பு பண்ணவனை கூட நான் மன்னிச்சிருவேன், ஆனா செஞ்ச தப்பை சரிக்கட்டணும்ன்னு நினைக்கிறவனை மன்னிக்க மாட்டேன்' என்ற பஞ்ச டயலாக்குடன் விஷால் அறிமுகமாகிறார்.
நாயகி தமன்னா கவர்ச்சி மட்டுமின்றி ஆக்சனுக்கும் கைகொடுத்துள்ளார் என்பது தெரிகிறது. காமெடி ஜாம்பவான்களாக வைகைப்புயல் வடிவேலு மற்றும் சூரி ஆகியோர் முதல்முறையாக ஒரே படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவருமே வித்தியாசமான கெட்டப்பில் கலக்குகின்றனர்.
காருடன் கார் மோதல், பறக்கும் கார் என பக்கா ஆக்சன் படமாக அமைந்துள்ள இந்த படத்தின் டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.