விஷாலின் 'கத்திச்சண்டை' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Sunday,November 06 2016]

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் மற்றும் காமெடி திரைப்படமான 'கத்திச்சண்டை' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தற்போது முடிந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளதால் தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, தருண் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை எஸ்.நந்தகோபால் மற்றும் விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

30 வருடங்களுக்கு பின் இணையும் கமல்ஹாசன் - சாருஹாசன் சகோதரர்கள்

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு பின்னர் 30 வருடங்கள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன்...

தனுஷின் 'மாஸ்' அறிவிப்பு இதுவா? ஆச்சரியத்தில் கோலிவுட்

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கொடி' நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ள நிலையில் தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி...

த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு இதுதான் காரணமா?

கடந்த தீபாவளி தினத்தில் தனுஷுடன் த்ரிஷா நடித்த 'கொடி' தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.

'பைரவா' படத்தின் இன்னொரு பாடல் வரிகள் இதோ

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் 'பட்டையக் கெளப்பு, குட்டையக் குழப்பு' பாடல் வரிகளை சமீபத்தில் கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.