விஷால்-தமன்னாவின் 'கத்திசண்டை' தொடங்கியது
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'கத்திசண்டை' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் நாயகியும் பிரபல நடிகையுமான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் விஷால் மற்றும் வடிவேலுவுடன் நான் நடிக்கும் அடுத்த படமான 'கத்திசண்டை' முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். இந்த படம் நகைச்சுவைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கின்றேன்' என்று தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமன்னா ஏற்கனவே சுராஜூடன் 'படிக்காதவன்' படத்திலும், வடிவேலுவுடன் 'தில்லாலங்கடி' படத்திலும் இணைந்து பணியாற்றியிருந்த போதிலும், விஷாலுடன் இந்த படத்தில்தான் முதல்முறையாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய்சேதுபதியுடன் தமன்னா நடித்த 'தர்மதுரை' படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com