விஷாலின் 'கத்திச்சண்டை காட்சிகள்

  • IndiaGlitz, [Wednesday,August 03 2016]

'மருது' வெற்றி படத்திற்கு பின்னர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் 'கத்திச்சண்டை. விஷாலுக்கு ஜோடியாக முதன்முதலில் தமன்னா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பிரமாண்டமான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த சேஸிங் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல்' வடிவேலு நகைச்சுவை வேடத்தில் இந்த படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார். ஜெகபதிபாபு மற்றும் தருண் அரோரா வில்லன் வேடங்களை ஏற்க மற்றொரு முக்கிய நகைச்சுவை வேடத்தில் சூரி நடித்து வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இந்த படத்தை எஸ்.நந்தகோபால் மற்றும் விஷால் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

More News

காந்திஜி போல எனக்கும் இருவர். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் முடிந்து....

விக்ரம்பிரபுவின் 'வாஹா' சென்சார் தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலக வாரிசும், வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகருமான...

சந்தானத்துடன் இணையும் பிரபல வெற்றி பட இயக்குனர்

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படம் 'எந்திரன்' என்ற மிகப்பெரிய சுனாமியை சமாளித்து வசூலை அள்ளிய படம்...

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'சங்கமித்ரா' திரைப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளது...

ஹன்சிகாவை அடுத்து சி.வி.குமாருடன் இணைந்த சூர்யா

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார்...