அதிரடி விஷால், பிகினி தமன்னா: 'ஆக்சன்' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,September 13 2019]

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘ஆக்சன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

‘ஆக்சன்’ என்ற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் டீசர் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில் ஆக்சன் தான் உள்ளது. குறிப்பாக ஹாலிவுட் படங்களுக்கு இணையான சேஸிங் காட்சிகள் அதிகம். எனவே இந்த படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஆக்சன் பட பிரியவர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமன்னா டூபீஸ் பிகினி உடையிலும் ஒரு காட்சியில் இந்த டீசரில் தோன்றுவதால் இந்த படத்தில் கவர்ச்சிக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அதிரடி பின்னணி இசை, டட்லியின் கேமிராவில் படமாக்கப்பட்ட அற்புதமான வெளிநாட்டு காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்கள். தொடர்ச்சியாக செண்டிமெண்ட், குடும்பக்கதை, காமெடி மற்றும் திகில் பேய்ப்படங்களை இயக்கி வந்த சுந்தர் சி முதல்முறையாக முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படத்தை இந்த ‘ஆக்சன்’ மூலம் கொடுத்துள்ளார். மொத்தத்தில் தமிழில் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றே இந்த டீசரில் இருந்து தெரிகிறது
 

More News

தனுஷின் அடுத்த படத்தின் நாயகியாகும் மலையாள நடிகை!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நாயகியாக நடித்திருந்தார்

அமீர்கான் படத்தில் யோகிபாபு? அடித்தது அதிர்ஷ்டம்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் ஒரு படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவலை அமீர்கானை சமீபத்தில்

சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

நேற்று பள்ளிக்கரணை அருகே குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பேனர் விழுந்ததால் பலியான சம்பவம் பெரும்

இனிமேல் நல்லதுதான் நடக்கும்: லாஸ்லியாவுக்கு ஷெரின் தாயார் ஆறுதல்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வந்ததால் வாரம் போனதே தெரியவில்லை. குறிப்பாக லாஸ்லியா குடும்பத்தினர் வருகையை வைத்தே ஒரு நாள் ஓட்டியாகிவிட்டது.

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? பேனரால் பலியான பெண் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

அரசியல் கட்சி பேனர் காரணமாக பலியான இளம்பெண் சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது