விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,October 09 2016]

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் சிறு மாற்றமாக இந்த படம் நவம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் டீசர் வரும் 14ஆம் வெளியாகவுள்ளது. இந்த தகவலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல்' வடிவேலு நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஜெகபதிபாபு மற்றும் தருண் அரோரா வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய காமெடி வேடத்தில் சூரி நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை எஸ்.நந்தகோபால் மற்றும் விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.