நடிகர் விஷால் திடீர் உண்ணாவிரதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் தெருவில் தெரியும் நாய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்றும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அம்மாநிலத்தின் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி சமீபத்தில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பிராணிகள் நல வாரிய உறுப்பினர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நாய்களை கொல்லக்கூடாது என நடிகர் விஷால் குரல் கொடுத்துள்ளார். இதற்காக வரும் 25ஆம் தேதி சென்னை வள்ளுவர் கூட்டத்தில் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், இந்த உண்ணாவிரதத்தில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு People For CATTE IN INDIA' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால், நடிகை ராய்லட்சுமி உள்பட பலர் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரதத்தின் முடிவில் மனு ஒன்றை எழுதி அதை கேரள மாநில முதல்வர், ஆளுனர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout