விஷால் எடுத்த 15 நாள் முடிவு என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பணிகள், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியின் பணிகள், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மலேசிய நட்சத்திர விழா பணிகள் ஆகியவைகளுடன் தான் நடித்து வரும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படப்பிடிப்புகளிலும் நடிகர் விஷால் கலந்து கொண்டு ஓய்வின்றி உழைத்து வந்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாகவே அவர் படப்பிடிப்புகள் மட்டுமின்றி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்ததால், தற்போது அவர் 15 நாட்கள் முழு ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். 15 நாட்கள் ஓய்விற்கு பின்னர் அவர் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் சங்க பணிகளிலும் ஈடுபடுவார் என கூறப்படுகிறது

மேலும் நடிகர் சங்கத்தின் இரண்டு வருட பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து, அடுத்த தேர்தல் வேலைகளிலும் விஷால் முழுமூச்சாக ஈடுபடவேண்டிய நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விரைவில் பிக்பாஸ் 2: கமலுக்கு பதில் யார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த வருடம் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது

அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு கொண்டு வந்த செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 36' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

என் பாணி வேறு, கமல் பாணி வேறு: கமல் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுவொரு நட்பு ரீதியான சந்திப்பு

கமல்-ரஜினி திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?

நடிகர் கமல்ஹாசன் இன்னும் இரண்டு நாட்களில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவர் பல அரசியல் கட்சி தலைவர்களையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார்

செக்க சிவந்த வானம்: தமிழகத்தை உலுக்கும் முக்கிய நிகழ்வின் கதையா?

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஐஸ்வர்யாராய், அதிதிராவ் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் 'செக்க சிவந்த வானம்'