விஷால் எடுத்த 15 நாள் முடிவு என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பணிகள், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியின் பணிகள், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மலேசிய நட்சத்திர விழா பணிகள் ஆகியவைகளுடன் தான் நடித்து வரும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படப்பிடிப்புகளிலும் நடிகர் விஷால் கலந்து கொண்டு ஓய்வின்றி உழைத்து வந்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாகவே அவர் படப்பிடிப்புகள் மட்டுமின்றி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்ததால், தற்போது அவர் 15 நாட்கள் முழு ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். 15 நாட்கள் ஓய்விற்கு பின்னர் அவர் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் சங்க பணிகளிலும் ஈடுபடுவார் என கூறப்படுகிறது

மேலும் நடிகர் சங்கத்தின் இரண்டு வருட பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து, அடுத்த தேர்தல் வேலைகளிலும் விஷால் முழுமூச்சாக ஈடுபடவேண்டிய நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.