அரசியல்ரீதியான பிரச்சனை. கமலுக்கு துணை நிற்போம். விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. கமல்ஹாசனின் பேட்டிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே அரசு விழா ஒன்றில் காட்டமான பதிலளித்தார்.
இந்நிலையில் அரசியல் ரீதியாக கமல்ஹாசனுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். அரசையும், முதலமைச்சரையும் விமர்சனம் செய்வது கமலின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் என்றும், முதலமைச்சருக்கும், கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து மோதல், அவரவர் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் என்றும் கூறிய விஷால் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் நிச்சயமாக துணை நிற்கும் என்று கூறினார்.
நடிகர் சங்க தேர்தலின்போது விஷால் அணிக்கு கமல்ஹாசன் முழு ஆதரவு கொடுத்தார் என்பதும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் விண்ணப்பத்தை முன்மொழிந்தவர் கமல் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout