ஹரியின் 'ரத்னம்' படப்பிடிப்பு.. விஷால் தந்த சூப்பர் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் சில சூப்பர் அப்டேட்டுகளை அவர் தெரிவித்துள்ள நிலையில் விஷாலின் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமைந்துள்ளது.
விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் ஹரி அவர்களுடன் தான் மூன்றாவது முறையாக மீண்டும் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை ஆகிய இடங்களில் நடந்ததாகவும் இந்த படத்தை விரைவாக முடிக்க உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் அற்புதமான சிங்கிள் பாடலை விரைவில் வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சமாகவும் ஆக்ஷன் விருந்தாகவும் இருக்கும் என்றும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Yes yes yes. Done with entire shoot of #Rathnam. Was an absolute pleasure to work with Dir Hari sir for the third time, with darling DOP @mynnasukumar and the entire unit. Always a memory for life working in such a positive atmosphere all through the shoot right from Tuticorin,… pic.twitter.com/TJzRg9skFb
— Vishal (@VishalKOfficial) January 23, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments