2ஆம் பாகம் ஆகிறது விஷாலின் சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி..!
- IndiaGlitz, [Monday,December 16 2024]
விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, வசூலில் 100 கோடி ரூபாய் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷாலுக்கு கிடைத்த சூப்பர் ஹிட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷால் தற்போது ’துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அந்த படம் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது ’மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
’மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வருவதால், இந்த படத்தை முடித்தவுடன் அவர்’ மார்க் ஆண்டனி 2’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால், எஸ்.ஜே. சூர்யா, மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.