விஷால்-தமன்னா படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

விஷால், தமன்னா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு 'கத்திச்சண்டை' என்ற திரைப்படம் வெளிவந்த நிலையில் மிண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். 'ஆம்பள' படத்திற்கு பின் விஷால் படத்தை மீண்டும் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி முதல் சுந்தர் சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதே பிப்ரவரி மாதம் தான் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் தற்போது வெங்கட்மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைய நிலையில் அதன்பின் விஷால், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது.

More News

தனுஷின் 'அசுரன்' படம் குறித்த முக்கிய தகவல்

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' என இரண்டு படங்கள் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.

'தளபதி 63' படம் குறித்த ஒரு சர்ப்ரைஸ் தகவல்

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித் ரசிகர்களின் செயல் பைத்தியக்காரத்தனம்: சீமான்

அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியான தினத்தில் அவரது ரசிகர்கள் அஜித் கட் அவுட்டுக்கு பால் ஊற்றியதை சீமான் கண்டித்துள்ளார். மேலும் அஜித் ரசிகர்களின் இந்த செயல் பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அழைப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

அமிதாப்பச்சன் மகன் உட்கார்ந்து பார்க்கும் கபடி: ராதாரவி கலகல பேச்சு

ரெளடிகள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக ஒருகாலத்தில் கருதப்பட்ட கபடி விளையாட்டு இன்று அமிதாப்பச்சன் மகன் உட்கார்ந்து பார்க்கும் நிலையில் உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி