விஜய்சேதுபதிக்காக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' ரிலீசின்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் விஷாலுக்கும் இடையே பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாகவும், பின்னர் விஜய்சேதுபதி தலையிட்டதால் அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்த பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி பேசியபோது, 'இதற்கு யாரும் பொறுப்பல்ல என்றும், இது சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் பிரச்சனை' என்றும் பெருந்தன்மையாக கூறினார். அதேபோல் விஷாலும், தனக்கு வரவேண்டிய பணத்திற்காக விஜய்சேதுபதி பொறுப்பேற்க வேண்டாம் என்றும், அந்த பணத்தை தானே தயாரிப்பாளரிடம் பெற்று கொள்வதாகவும் கூறினார்.

இந்த நிலையில் '96' திரைப்படத்தை சென்னையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் ஒருசிலர் செல்போனில் படம் பிடிப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் '96' திரைப்படத்தை செல்போனில் படம்பிடித்த விக்னேஷ், வசந்த் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் குறிப்பாக விஷாலின் அதிரடியால் இந்த குற்றம் தடுக்கப்பட்டதற்கு '96' படக்குழுவினர் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

More News

விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார் செய்ய காமெடி நடிகர் முடிவு

கடந்த இரண்டு நாட்களாக காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து வருவது தெரிந்ததே

இது காலங்காலமாக நடக்கும் பிரச்சனை: '96' பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் அதிகாலை காட்சி ரத்தானது.

சூர்யா படத்தில் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகர்?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரதமராக ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கும் செய்திவெளிவந்துள்ளது.

ரஜினி பாடலுக்கு நடனமாடும் நித்யானந்தா சிஷ்யைகள்

நித்தியானந்தா குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை தமிழில் பேச வைக்கும் சாப்ட்வேர் கண்டுபிடித்திருப்பதாக நித்யானந்தா கூறினார்.

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'செக்க சிவந்த வானம்' , '96' என அடுத்தடுத்த விஜய்சேதுபதியின் படங்கள் வெற்றி பெற்று வருவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.