மனுதாக்கலுக்கு முன் விஷால் செய்ய போகும் மரியாதை

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்  சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர்களுக்கு மரியாதை செய்யும் விபரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

நடக்கவிருக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இன்று அதற்கான மனுதாக்கல் செய்யவிருக்கின்றேன். அதன் விபரங்கள்:

காலை 9 மணி: ராமாவரத்தில் உள்ள புரட்சித்தலைவர் இல்லத்தில் மரியாதை செய்தல்

காலை 10 மணி: மெரீனாவில் புரட்சித்தலைவி நினைவிடத்தில் மரியாதை செய்தல்

மதியம் 12.30 மணி: ஆர்.கே நகர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.