அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன? விஷால் அறிக்கை

  • IndiaGlitz, [Friday,December 08 2017]

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் ஆளுங்கட்சிக்கு விடுத்த வேண்டுகோள் குறித்தும் விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆர்கே நகர் சட்டமன்ற இடைதேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவே... ஆர்கே நகர் மக்களுக்கு மக்கள் பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் என்னும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், என்னுடைய மக்கள் பணிகளும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் தொடரும்.

நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் ஆதரிப்பதாக இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு முடிவை எடுக்கவே இல்லை.

எனது போராட்டத்தில் என்னுடன் துணை நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதேபோல் எனக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன். 

ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை...ஆர்கே நகர் தேர்தல் உங்களுக்கு முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் கன்னியாகுமரியில் நடக்கும் குளச்சல் மீனவர்கள் போராட்டம். மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியம்.  நியாயமான கோரிக்கைகளுடன் இரண்டு நாட்களாக போராடி வரும் மீனவர்களை உடனே சந்தித்து பேசி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஆர்கே நகர் மக்கள் கூட இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களுக்கு நல்ல பெயரைத் தான் கொடுக்கும். மீனவர்கள் சார்பிலும் ஆர்கே நகர் தொகுதி மக்கள் சார்பிலும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

More News

பரபரப்பை ஏற்படுத்திய சேகர் ரெட்டியின் டைரி;

கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது பொதுமக்கள் பலர் ஒரே ஒரு ரூ.2000 நோட்டுக்காக பலமணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

ஐடி வேலைக்கு பதில் ஆன்லைனில் கீரை விற்பனை: கோவை இளைஞரின் சாதனை

ஐடி அலுவலகத்தில் பணிபுரிந்த கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐடி பணியை உதறிவிட்டு ஆன்லைனில் கீரை விற்பனையில் சாதனை புரிந்து வருகிறார்

அரை வேக்காட்டு நபர்களின் வசூல் விபரங்கள்: எஸ்.ஆர்.பிரபு ஆவேசம்

கோலிவுட் திரையுலகில் வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனால் சனிக்கிழமையே அந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களை சில டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர்

அரை மணி நேரத்தில் போஸ்டரை தயார் செய்த தல ரசிகர்

தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'விசுவாசம்' படத்தில் அவர் கருப்பு நிற ஹேர் ஸ்டைலில் தோன்ற போகிறார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே.

துரோகிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம்: தினகரன்

தினகரனுக்கு நேற்று தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியது. இந்த சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்று கூறிய தினகரன், 'துரோகிகளுக்கு பிரஷர் ஏற்றவே ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தை தேர்வு செய்தோம்