தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் அறிக்கை

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவை திணறடித்ததோடு, திமுகவை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அபார வெற்றி பெற்றிருக்கும் திரு தினகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியை பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.  திரு. தினகரன் அவர்கள் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற திரு. தினகரன் அவர்களுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற திரு. தினகரன் அவர்கள் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும்  தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.